132. அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
இறைவன் சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர்
இறைவி சர்வாலங்கிருத நாயகி, கல்யாணி அம்பாள்
தீர்த்தம் எம தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கருக்குடி, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'மருதாநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - வலங்கைமான் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவு சென்று இடதுபுறம் திரும்பும் நாச்சியார் கோயில் சாலையில் அரை கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Marudhanallur Gopuram சற்குணன் என்னும் அரசன் வந்து வழிபட்டதால் இத்தலத்து மூலவர் 'சற்குணலிங்கேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'சற்குணலிங்கேஸ்வரர்', 'கருக்குடிநாதர்' என்னும் திருநாமங்களுடன், உயர்ந்த பாணத்துடன், மிகவும் சிறிய அளவிலான லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'சர்வாலங்கிருத நாயகி', 'அத்வைத நாயகி', 'கல்யாணி' என்னும் திருநாமங்களுடன் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றாள்.

வழக்கமாக மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் அம்மன் சன்னதி இருக்கும். ஆனால் இக்கோயிலில் வலப்புறம் உள்ளது. இருவரும் கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றனர். அம்மன் சன்னதிக்கு எதிரே இத்தலத்தில் வழிபட்டு தொழுநோய் நீங்கப்பெற்ற வணிகர் தனஞ்சயனின் சிலை உள்ளது.

Marudhanallur Subramaniyarபிரகாரத்தில் வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், லிங்கோத்பவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

அனுமன் லிங்கத்தை எடுத்துக் கொண்ட வர நேரமானதால் இராமபிரான் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அருகில் 'அனுமந்த லிங்கம்' என்ற பெயருடன் வழங்கப்படுகிறது.

Marudhanallur Praharamகோயிலுக்கு சிறிது தொலைவில் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகளின் சமாதி அமைந்துள்ளது. இத்தலத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ஏனாதி நாயனார் அவதாரத் தலமாகிய ஏனநல்லூர் உள்ளது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். கோயில் தொடர்புக்கு: ஸ்ரீதர் குருக்கள் - 99435 23852

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com